பிச்சைக்காரன் 2 படத்தில் இருந்து நான்கு நிமிட, ஸ்னீக் பீக் காட்சி நாளை மாலை வெளியாக உள்ளதாக நடிகர் விஜய் ஆண்டோனி அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளரான விஜய் ஆன்டனி, தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தைதுவங்கியவர் . இதைதொடர்ந்து, இவர் முழு நீல ஹீரோவாக 'நான்' என்கிற படத்தின் மூலம் நடித்தார். பின்னர் சலீம், இந்தியா பாகிஸ்தான், என அடுத்தடுத்து ஹீரோ சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில், இவர் இயக்குனர் சசி இயக்கத்தில்... கடந்த 2015 ஆம் ஆண்டு நடித்த திரைப்படம் 'பிச்சைக்காரன்'. வெளிநாட்டில் படித்து விட்டு, வரும் ஒரு மிகப்பெரிய பணக்காரன்... சில நாட்கள் தன்னுடைய அம்மாவுக்காக தன்னுடைய அடையாளத்தை மறைத்து கொண்டு, எதற்காக பிச்சைக்காரனாக வாழ்கிறான். என அம்மா சென்டிமென் கதைக்களத்தோடு வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக மாறியது.

விதவிதமான சேலையில் ... முன்னணி நடிகைகளை அழகில் ஓவர் டேக் செய்யும் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி!

இப்படம் விஜய் ஆண்டனி திரையுலக வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன்வைத்து வந்த நிலையில், தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது, விஜய் ஆண்டனிக்கு திடீர் என ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனியின் தாடை மற்றும் மூக்கு பகுதி சேதமடைந்தது.

13 வருடங்களு பின் தமிழில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி ! ஹீரோவான கணேஷ் வெங்கட்ராம்!

ஒருவழியாக இந்த விபத்தில் இருந்து மீண்டுள்ள விஜய் ஆண்டனி நன்கு உடல்நலம் தெரிவித்ததாகவும் விரைவில் உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, விஜய் ஆன்டனி தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். அதாவது "பணம் உலகை காலி பண்ணிடும்' என்கிற கேப்ஷனுடன்... நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்னீக் பீக் காட்சி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா? கணித்து கூறிய ரசிகர்கள்!

இந்த தகவல் விஜய் ஆண்டனி ரசிகர்களை உச்சாக படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிச்சைக்காரன் 2 படத்தை, விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து வருவதோடு இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான "விஜய் ஆண்டனி பிக்சர்ஸ்" மூலம் அவனது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார். இப்படம் மார்ச் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…