Asianet News TamilAsianet News Tamil

27 வளர்ப்பு பசங்க.. 24 மணி நேரமும் யார் வந்தாலும் சாப்பாடு.. ரோபோ சங்கர் மருமகனின் மறுபக்கம்..

ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் 27 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து நடத்தி வருகிறார். தான் சொந்தமாக கட்டிய அன்பு இல்லம் என்ற வீட்டில் இந்த குழந்தைகளை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கார்த்திக் செய்து வருகிறார்.

Robo shanakar daughter indraja shankar daughter Karthik has adopted 27 children and running anbu illam Rya
Author
First Published Apr 3, 2024, 4:15 PM IST

நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜா சங்கருக்கும் கார்த்திக்கும் கடந்த 24-ம் தேதி மதுரையில் கோலாகலமாக நடந்தது. இதை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நடந்தது.. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இந்திரஜா தனது மாமா கார்த்திகையே திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலில் தாய் மாமா என்று கூறப்பட்ட நிலையில் அவர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் சொந்த தம்பி இல்லை என்று தகவல் வெளியானது. ஆதரவற்ற தன்னை பிரியங்கா தான் தத்தெடுத்து வளர்த்தார் என்று கார்த்திக் பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

அதுமட்டுமல்ல கார்த்திக் 27 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து நடத்தி வருகிறார். ஆம்.  தான் சொந்தமாக கட்டிய அன்பு இல்லம் என்ற வீட்டில் இந்த குழந்தைகளை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கார்த்திக் செய்து வருகிறார். இவரின் வீட்டில் 24 மணி நேரமும் உணவு கிடைக்குமாம்.. பசியுடன் யார் வந்தாலும் இவரின் வீட்டில் சாப்பிட்டுக் கொள்ளலாம். தினமும் பசியோடு வருபவர்களுக்கு இலவச உணவளித்து வருகிறார். 

சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்ட கார்த்திக் அதற்கேற்ற பெண் கிடைத்தால் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறார். அதன்பின்னரே இவருக்கு ஆதரவாக இருக்கும் வகையில் இந்திரஜா அவரின் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனித்து வருகிறார். 

பிரபல யு டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கார்த்திக் “ அன்பு இல்லத்திற்கு வந்தால் எப்போதும் சாப்பாடு இருக்கும். கீரை விற்பவர்கள், முடியாதவர்கள் என யார் வேண்டுமானாலும் இங்கு சாப்பிடலாம். இதே மாதிரி கடைசி வரை சேவை செய்ய வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறினார்.

கார்த்திக்கின் வீட்டில் குழந்தைகள் படிப்பதற்கான அறை, புத்தகங்கள் வைப்பதற்கான அறை, ஓய்வெடுக்கும் அறை என பல அறை இருக்கிறது. தனக்கு குழந்தைகள் பிறந்தாலும் அவர்களுக்கு கூட இந்த வீடு இருக்குமா என்று தெரியாது எனவும் இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு இந்த வீடு இருக்கும் என்று உறதிபட தெரிவித்தார்.

தனது 6 வயதில் தந்தையை இறந்த தனக்கு இந்த சமூகம் நிறைய உதவிகளை செய்துள்ளதால் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த உதவிகளை செய்து வருகிறார். பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டே படித்து முன்னேறிய கார்த்திக் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். தற்போது அவருடன் இந்திரஜாவும் இணைந்துள்ளார். இந்திரஜாவும் தற்போது குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து, குழந்தைகளை அன்புடன் கவனித்து வருகிறாராம்.. கார்த்திக் – இந்திரஜாவின் சேவை தொடர வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios