பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீகார் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். 

மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யுள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். மொத்தமாக சுமார் 50 கோடி வரை ரியா சக்ரபர்த்தி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 7ம் தேதி ரியா சக்ரபத்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். 

 

இதையும் படிங்க: “சன்னி லியோன் 2.0”... கொசுவலை போன்ற உடையில் எல்லை தாண்டி கலங்கடித்த யாஷிகாவை பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்...!

இதனிடையே பீகார் போலீசார் பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி ரியா சக்ரபர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து  விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று, வழக்கு விவரங்களை மும்பை போலீஸ், சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கை 11 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்போது ரியா சக்ரபர்த்திக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர் இருப்பதாக அவருடைய வாட்ஸ் அப் உரையாடல்கள் மூலம் தெரிய வந்தன. அதிலிருந்து எம்.டி.எம்.ஏ., மரிஜுவானா மற்றும் பிற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ரியா பயன்படுத்தியது தெளிவானது. இதையடுத்து ரியா மீது போதை பொருள் கட்டுப்பாட்டுத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

 

இதையும் படிங்க: “இதோ எங்கள் இளவரசி”... மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்... குவியும் லைக்ஸ்...!

இந்நிலையில் எனது மகனை ரியா சக்ரபர்த்தி விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார் என பகீர் குற்றச்சாட்டை சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் முன்வைத்துள்ளார். அவரை கட்டாயம் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ள கே.கே.சிங், அவர் சுஷாந்திற்கு போதைப்பொருட்களை கொடுத்து கொலை செய்திருப்பார் என சந்தேகத்தை கிளப்பியுளார்.