ரிவெஞ் மோடில் ரீஎண்ட்ரி கொடுக்கிறேன்.. பிரதீப் போட்ட மாஸ் ட்வீட் - அப்போ மாயா அண்ட் கோ நிலை என்ன ஆகும்?
Bigg Boss Pradeep Antony : முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த பிக் பாஸ் சீசன் 7 மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீபுக்கு ஆதரவாக அவருடைய பேன்ஸ் இணைய வழியில் களமிறங்கியுள்ளனர்.
இந்த முறை பிக் பாஸ் வீட்டில் ஸ்மால் பாஸ் என்ற வீடும் இணைக்கப்பட்டது, மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் துவக்கத்திலேயே நடிகை அனன்யா வெளியேற, அவரைத் தொடர்ந்து நடிகர் பாவா செல்லதுரை அவர்களும் தானாகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து பல போட்டியாளர்கள் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி அனுதினமும் சுவாரஸ்யமான பல திருப்பங்களோடு சென்று கொண்டிருந்த நிலையில், நடிகர் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆபத்தான முறையில் செயல்படுகிறார் என்று கூறி, அவர் மேல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் அவருக்கு ரெக்கார்ட் கொடுத்து வெளியேற்றினார்.
ஆனால் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசனை எதிர்த்து எதிர்ப்பு குறள்கள் கிளம்ப துவங்கியது. குறிப்பாக பிரதீப்பின் ரசிகர்கள் கமலை கடுமையாக விமர்சித்தனர். அதே போல கடந்த நவம்பர் 7ஆம் தேதி உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதீப் அவர்களும் #TheeraVisaripatheMei என்ற ஹாஷ் டேக்குடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னை பிக் பாஸ் வீட்டிற்குள் திரும்ப அனுப்ப முடிவுகள் எடுக்கப்பட்டால் தனக்கு எதிராக செயல்பட்ட இரண்டு போட்டியாளர்களை வெளியேற்ற தனக்கு இரண்டு ரெட் கார்டுகள் வேண்டும் என்றும், ஏழாவது வார பிக்பாஸிற்கு, தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்கின்ற இரு கண்டிஷன்களை முன் வைத்தார் பிரதீப்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் போட்டுள்ள ஒரு டீவீட்டில் "நான் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் சென்றேன் என்றால், அது ஒரு படத்தின் இரண்டாம் பாதியில் வருகின்ற Revenge காட்சிகள் எப்படி இருக்குமோ? எனது என்ட்ரி அப்படி இருக்கும் என்று கூறி தனது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மாயா மற்றும் அவரை சேர்ந்த போட்டியாளர்களின் நிலை என்ன ஆகும் என்பது குறித்த யூகங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் பிரதீப்பின் ரசிகர்கள்.