திரையரங்கில் தீபாவளி கொண்டாட்டம்... கார்த்தியின் தியேட்டர் விசிட்டால் களைகட்டிய ஜப்பான் FDFS - போட்டோஸ் இதோ
கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படமும், ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் FDFS கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.
FDFS celebration
தீபாவளி என்றாலே புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். குறிப்பாக அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தான் பெரும்பாலும் தீபாவளியை ஆக்கிரமிக்கும். ஆனால் இந்த ஆண்டு அவர்கள் படம் ஒன்றுகூட ரிலீஸ் ஆகவில்லை. அதனால் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நடிகர்களான கார்த்தி, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆகி உள்ளன.
Japan and Jigirthanda
இதில் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படத்தை ராஜு முருகன் இயக்கி உள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஜப்பான் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இது நடிகர் கார்த்தியின் 25-வது படம் என்பதால் இப்படத்தை ரசிகர்கள் இன்னும் கூடுதல் ஸ்பெஷலாக கொண்டாடி வருகின்றனர்.
karthik subbaraj
அதேபோல் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி உள்ள மற்றுமொரு பெரிய படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இத் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படமும் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
karthi
ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படங்களின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டது. இதனால் திரையரங்குகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. ரசிகர்கள் இன்றே பட்டாசு வெடித்து தீபாவளி போல் கொண்டாடினர். நடிகர் கார்த்தி சென்னயில் உள்ள காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்தார். அப்போது அவருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
sj suryah, lawrence, Santhosh Narayanan
அதேபோல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் காட்சியை நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தான்ர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இந்த 2 விஷயத்துக்கு ஓகே சொல்லுங்க உடனே வரேன்... பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம்