ஜெய்லரிடம் தோற்றுப்போனாரா லியோ?.. திரையரங்கை சூழ்ந்த தீபாவளி ரிலீஸ் படங்கள் - லியோ பட வசூல் நிலவரம் என்ன?
Jailer Vs Leo : தமிழ் திரையுலகில் விஜய் அஜித் என்ற போட்டி மாறி, தற்பொழுது களம் ரஜினி, விஜய் என்கின்ற நிலையில் உள்ளது என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு இரு நடிகர்களுடைய திரைப்படமும் போட்டி போட்டு வசூல் சாதனை படைத்து வருகிறது.
Jailer vs leo.
அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியான "லியோ" திரைப்படம் முதல் நாளிலேயே சுமார் 148 கோடி ரூபாயை வசூல் செய்தது. அதனை தொடர்ந்து அந்த திரைப்படம் வெளியாகி ஏழாவது நாள் முடிவில் சுமார் 460 கோடியை தாண்டிய நிலையில், படம் வெளியாகிய 12 ஆம் நாளில் லியோ திரைப்படம் மொத்தமாக 541 கோடியை கடந்து வசூலித்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த 2 விஷயத்துக்கு ஓகே சொல்லுங்க உடனே வரேன்... பிரதீப் போட்ட கண்டிஷனால் ஆடிப்போன பிக்பாஸ் டீம்
Jailer
அதேபோல ஜெயிலர் திரைப்படம் வெளியான முதல் நாளில் லியோ திரைப்படத்தை விட குறைவாக 100 கோடி மட்டுமே வசூல் செய்த நிலையில், ஒரே வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூலை பெற்றது, மேலும் 12 வது நாளில் 510 கோடியை பெற்ற ஜெயிலர் திரைப்படம், 16 வது நாள் முடிவில் சுமார் 525 கோடியை கடந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக இறுதியாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருந்த நிலையில், லியோ திரைப்படமும் 600 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Japan and Jigirthanda
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்றளவும் வெளியாகவில்லை கடந்த அக்டோபர் 19ஆம் தேதி முதல் இன்று வரை பல திரையரங்குகளில் லியோ திரைப்படம் ஓடி வந்த நிலையில் இன்று நவம்பர் 10ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் ஜப்பான், எஸ்ஜே சூர்யா மற்றும் லாரன்ஸின் ஜிகர்தண்டா 2, விக்ரம் பிரபுவின் ரெய்டு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
Leo movie Box Office
இதனால் லியோ திரைப்படத்திற்கு வழங்கப்படும் திரையரங்குகளில் எண்ணிக்கை பெரிய அளவில் குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக வசூலிலும் லியோ திரைப்படம் குறைந்த அளவே பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 600 கோடி ரூபாய் என்கின்ற அந்த இலக்கை லியோ திரைப்படம் பிடிக்க தவறி விட்டதா? இதனால் ஜெயிலர் படத்திடம் லியோ படம் தோர்த்துவிட்டதா? என்பது குறித்த விவாதங்கள் தற்பொழுது இணையத்தில் எழுந்துள்ளது.
ஆகவே தயாரிப்பு நிறுவனம் லியோ திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் பொழுது தான் வென்றது லியோ படமா? அல்லது ஜெயிலர் படமா? என்பது குறித்த தகவல்கள் தெரியவரும்.