திரையில் கலக்கியாச்சு.. அடுத்து OTT தான் - நவம்பரில் இனி இணையத்தில் கலக்க வரும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ!
November OTT Release : வெள்ளித்திரையில் கலக்கிய பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக OTT தளங்களில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தளபதி விஜய் துவங்கி நடிகர் விக்ரம் பிரபு வரை, பல முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் இந்த நவம்பர் மாதம் OTTயில் வெளியாக உள்ளது.
Vikram Prabhu Movie
புலிக்குத்தி பாண்டி
பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் புலிக்குத்தி பாண்டி. பிரபல நடிகர் விக்ரம் பிரபு புலிகுத்தி பாண்டியாக நடித்திருந்தார். நாயகியாக லட்சுமி மேனனும், பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி, ஆர்கே சுரேஷ், வேள ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இன்று நவம்பர் 10ம் தேதி இந்த திரைப்படம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆதாரத்தை காட்டுங்க... இல்லேனா ஜோவிகாவை வைத்தே கமல் மேல கேஸ் போடுவேன் - மிரட்டும் வனிதா
The Road
தி ரோடு
இந்த ஆண்டு திரிஷாவிற்கு "பொன்னியின் செல்வன் பாகம் 2", "லியோ" மற்றும் "தி ரோடு" ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் திரிஷா நடிப்பில் அருண் வசீகரன் இயக்கி வெளியான திரைப்படம் தான் "தி ரோடு". கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் சபீர், வேள ராமமூர்த்தி, சந்தோஷ் பிரதாப் மூத்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், "ஆஹா" OTT தளத்தில் இன்று நவம்பர் 10ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.
Leo movie OTT
லியோ
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் நடித்து வெளியாகிய "லியோ" திரைப்படம் உலக அளவில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக கேரளத் திரைத்துறை உலகில் இதுவரை அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற முதல் பெருமையும் லியோ திரைப்படம் பெற்றுள்ளது.
திரையரங்குகளில் நல்ல முறையில் ஓடிவரும் இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி "நெட்பிலிக்ஸ்" OTT தளத்தில் வெளியாகவுள்ளது. லியோ திரைப்படம் சுமார் 125 கோடி ரூபாய்க்கு OTTயில் விற்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் இணைந்து நடித்துள்ளார்.