எதிர்நீச்சல் ஹரிப்பிரியா - விக்னேஷ் குமார் விவாகரத்துக்கு இவர் தான் காரணமா?..உண்மையை போட்டுடைத்த நடிகை ..
பிரியமானவள் தொடர் மூலம் அறியப்பட்ட ஹரிப்பிரியா தனது காதல் திருமண பிரிவுக்கான உண்மை காரணத்தை வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார்.
பட்டி தொட்டியெல்லாம் சீரியல் :
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இல்லத்தரசியை வெகுவாக கவர்ந்து வருகிறது. பலருக்கான நாட் கடத்தலே சீரியல் உடன் தான் . அதிலும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளை தங்களது வீட்டில் ஒருவராவே பாவித்து விடுவார். பட்டிதொட்டியெல்லாம் சீரியல் பேச்சு தான்.
சீரியல் திருமணங்கள் :
ஸ்ரேயா- சித்து இருவரும் நீண்ட நாள் காதலுக்கும் பிறகு சமீபத்தில் மணமுடித்த புதிய தம்பதிகள். இவர்கள் ஏற்கனவே திருமணம் என்னும் சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களையடுத்து கயல் சீரியல் அபி நவ்யா- ‘என்றென்றும் புன்னகை’ தீபக், ஆர்யன் - ஷபானா தம்பதி , 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலின் நாயகி நக்ஷத்திரா- ராகவ் என அடுத்தடுத்த திருமணங்கள் நடிப்பெற்றன.
வீட்டுல விசேஷங்க :
பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவாக வந்த ஹேமாவுக்கு விஜய் டிவியில் பி\வளைகாப்பு நடத்தப்பட்டது. இவரை அடுத்து பாரதி கண்ணம்மா வெண்பாவாக வந்த பாரீனா, பாக்ய லட்சுமி ஜெனிஃபர், ராஜா ராணி ஆலியா மானசா என டுத்தடுத்து வளைகாப்பு விசேஷங்கள் நடைபெற்றது.
விவாகரத்து முடிவு :
சமீபத்தில் சரவணன் மீனாட்சி புகழ் ரசிதா மகாலட்சுமி தனது காதல் கணவர் தினேஷ் கோபால்சாமியை பிரிந்ததாக வெளியான தகவல் ரசிர்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு சீரியல் நாயகியின் விவாகரத்து குறித்த உண்மை வெளியாகியுள்ளது..
மேலும் செய்திகளுக்கு...Serial Actress Nakshathra: வாவ்... காதலரை கரம் பிடித்த நக்ஷத்ராவின் திருமண போட்டோஸ்! குவியும் வாழ்த்து!
பிரியமானவளே புகழ் இசை :
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் ஹரிப்ரியா. பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.. இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு, தற்போது எதிர்நீச்சல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
காதலருடன் திருமணம் :
நடிகை ஹரிப்ரியா அவர்கள் 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் செம வைரலாகி வருவது வழக்கம். பின்னர் திடீர் என ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மணமுறிவு செய்து கொண்டனர்.
விவாகரத்து காரணமான வி. ஜே :
இவர்களது விவாகரத்துக்கு சன் டிவி தொகுப்பாளர் அசார் என கிசுகிசுப்புகள் கிளப்பி விடப்பட்டன. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தால் உண்டான தகராறு காரணமாகவே விக்னேஷ் குமார் - ஹரிப்பிரியா விவாகரத்து செய்துகொண்டதாக கூறப்பட்டது.
ஹரிப்பிரியா விளக்கம் :
இந்த கிசு கிசு குறித்து சமீபத்தில் ஹரிப்பிரியா விளக்கம் அளித்துள்ளார். அதில் 'அந்த மனிதர் என்னுடைய பாய்பிரெண்ட் கிடையாது. காதல் கிடையாது, என் வாழ்க்கை துணையும் இல்லை .மகிழ்ச்சியாக பேசுவதே என்னுடைய பிறப்புரிமை. தவறு என்னுடையது இல்லை. பார்ப்பவர்களிடம் தான் உள்ளது. இதை நல்ல மனதோடு பார்த்தால் தவறாக தெரியாது' இவ்வாறு கூறி வதந்திகளுக்கு ஹரிப்ரியா முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.