- Home
- Cinema
- Serial Actress Nakshathra: வாவ்... காதலரை கரம் பிடித்த நக்ஷத்ராவின் திருமண போட்டோஸ்! குவியும் வாழ்த்து!
Serial Actress Nakshathra: வாவ்... காதலரை கரம் பிடித்த நக்ஷத்ராவின் திருமண போட்டோஸ்! குவியும் வாழ்த்து!
பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான நக்ஷத்திராவிற்கு (Nakshathra) இன்று திருமணம் நடந்த நிலையில், இவரது திருமண புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

சீரியல் நடிகர் - நடிகைகள் அடுத்தடுத்து திருமண வாழ்க்கையில் இணைந்து வரும் நிலையில், தற்போது தொகுப்பாளினியும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலின் நாயகி நக்ஷத்திரா அவரது காதலர் ராகவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
திருமணத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே தன்னுடைய ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட், நலங்கு போட்டோஸ் மற்றும் மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது தன்னுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மடிசார் கட்டிய தேவதை போல்... ஜொலிக்கும் தன்னுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை இவர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
திருமணம் ஆகிவிட்டதால் தற்போது இவர் நடித்து வரும் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது வெளியேறுவாரா என்பது குறித்தும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.