Ready to pair with Vikram in Samy-2 film There are no other people but laughter is Keerthi Suresh
ஒவ்வொரு நடிகர்களுக்கு பல ஹிட் படங்கள் இருக்கும். அதில் ஒரு சில படங்களின் இரண்டாம் பாகம் வந்தால் நல்ல இருக்கும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவர். அவர்களின் விருப்பத்தை ஏற்று அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் வரும்.
அப்படி, விக்ரம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு படம்தான் சாமி.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக விக்ரமே ஒரு நிகழ்ச்சியில் போட்டுடைத்தார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு துருவநட்சத்திரம், விஜய் சந்தர் ஆகிய படங்களுக்குப் பிறகு தொடங்கப்படுகிறது.
இப்படத்தின் முதல் பாகத்தில் திரிஷா நாயகியாக இருந்தார். ஆனால், இந்தமுறை வேறு யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டதும் ரசிகர்களே.
அதேபோன்று பல நாயகிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தான் விக்ரமின் ஜோடி என்றும், சாமி-2 படத்தின் கதைநாயகி என்றும் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளன.
கசிந்த தகவல் உண்மையானால் நமக்கு நல்ல திரை விருந்து காத்திருக்கு என்பதில் ஐயமில்லை.
