நெட்டிசன்கள் கல்யாணம் ஆகி சிறிது நாட்களிலேயே மனைவிக்கு உணவு டெலிவரி பாயாக மாறி விட்டீர்களா ? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான லிப்ரா ப்ரோடக்ஷன் மூலம் சுட்ட கதை, நளனும் நந்தினியும், தொலைநோக்குப் பார்வை, கல்யாணம், முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அதோடு மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என்னும் படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் யூடியூபில் பிக் பாஸ் குறித்து விமர்சனங்களையும் கொடுத்ததன் மூலம் தான் இவர் மிக பிரபலமானார். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற ரவீந்திரன் சமீபத்தில் பிரபல தொகுப்பாளனியும், சின்னத்திரை நட்சத்திரமுமான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக இவர்கள் இருவரும் ஒரு வருட காலமாக காதல் உறவிலிருந்ததாக கூறப்படுகிறது. மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வீடியோக்களும் சமூக வலைதளத்தை நிரப்பி வந்தன. இவர்களது திருமணம் திருப்பதியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று இருந்தது. பெற்றோர்கள் சம்பந்தத்துடன் நடைபெற்று உள்ளது. 

மேலும் செய்திகளுக்கு...கேமரா முன் நார்மல் உடையை கிளாமர் உடையாக சரி செய்த விஜய் பட நாயகி

View post on Instagram

திருமணத்திற்கு பிறகு ஏகபோக விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வந்தனர். இதனால் பிரபல யூட்யூப் சேனல்கள் அனைத்திற்கும் பேட்டி அளித்து வந்தனர் ரவீந்திரனும் மகாலட்சுமியும். ஒரு கட்டத்தில் தாங்கள் இனிமேல் பேட்டி அளிக்கப் போவதில்லை. எங்களது வாழ்க்கை கவனிக்க போகிறோம். உடல்ரீதியான விமர்சனங்களை இனிமேல் யாரைப் பற்றியும் கூறாதீர்கள். அது மிகவும் வருந்துத்தக்கது. என மகாலட்சுமியும் ரவீந்திரனும் சேர்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தனர். அதோடு ஹனிமூன் சென்ற இவர்கள் அவ்வப்போது தங்களது புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். 

மேலும் செய்திகளுக்கு...விஜயகாந்தை திடீரென சந்தித்த இயக்குனர் குழு... வைரலாகும் புகைப்படம்

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...கொஞ்சம் வித்தியாசமாய்.. செல்ல பிராணியுடன் கிளாமர் வீடியோ வெளியிட்ட ஷிவானி நாராயணன்

இந்நிலைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் அன்பே வா நாடகத்தில் மகாலட்சுமி நடித்து வருகிறார் அவருக்கு சமீபத்தில் ரவீந்திரன் உணவு கொண்டு போய் கொடுத்திருக்கிறார். இது குறித்து புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மகாலட்சுமிக்கு இன்று நான் டெலிவரிபாயாக மாறினேன் என குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் அன்பே வா சூட்டிங் ஸ்பாட் என் பொண்டாட்டிக்கு சரியான நாள் புரட்டாசி ஒன்று. சைவ சாப்பாடு கொடுத்த என் அம்மாவுக்கு நன்றி. ரொம்ப நாளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை ஏதாவது நல்லது செய்ததில் மகிழ்ச்சி நான் டான்ஸ் ஷோவில் சேருவதை அம்மா உறுதி செய்வார் என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து பதில் அளித்து இருந்த மகாலட்சுமி அத்தைக்கு நன்றி சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது என கூறியிருந்தார்.

View post on Instagram

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கல்யாணம் ஆகி சிறிது நாட்களிலேயே மனைவிக்கு உணவு டெலிவரி பாயாக மாறி விட்டீர்களா ? என கமெண்ட் செய்வதுடன். குழந்தை குட்டி என பெற்றுக் கொண்டு உங்களைப் பற்றி விமர்சிப்பவர்களின் வாயை சீக்கிரம் அடையுங்கள் எனவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.