சர்ச்சையான கதைக்களம் கொண்ட திரைப்படங்களாக இருந்தாலும் துணிச்சலாக நடிக்கும் சில கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ராதிகா ஆப்தே.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை கூறி ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாவார்.

இந்நிலையில் தற்போது இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். காரணம் குறிப்பிட்ட அந்த வீடியோவில், தன் பள்ளி பருவத்தில் ஆண் நண்பர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு குறித்தும், அவருக்கு வரும் காதல் கனவுகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அந்த வீடியோவில், ராதிகா ஆப்தே கூறியுள்ளது  '8 வயதில் பள்ளியில் தன்னுடன் படித்த ஆண் நண்பர் ஒருவரின் மீது ஈர்ப்பு வந்தது. இதனால் திரைப்படங்களில் வருவது போல அடைமழையில் நாங்கள் நிற்போம்.

என் புடவை முந்தானை கீழே விழும். அவன் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பான், இது நிஜத்தில் அல்ல கனவில்.

அந்த கனவுக்காகவே தினந்தோறும் காண்பதற்காகவே சீக்கிரமாக தூங்க சென்றுவிடுவேன்.' எனக்கூறி, 8 வயதிலேயே தனக்கு இருந்த கிராஷ் குறித்து கூறியுள்ளார். பள்ளி பருவத்திலேயே ராதிகா ஆப்தேவுக்கு இப்படி ஒரு காதல் இருந்ததா என ரசிகர்கள் அதிர்ச்சியாக இவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.