வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிலையில், மும்பையிலிருந்து வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்காகவே நடிகை ராஷ்மிகா மந்தனா புறப்பட்டு வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ தளபதி விஜய். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். தளபதி விஜய் மக்கள் இயக்கமும் நடத்தி வருகிறார். பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, ஷாம், பிரபு, சரத்குமார், ஆனந்தராஜ், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராமன், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
பிக்பாஸ் எலிமினேஷனில் இதை கவனித்தீர்களா.! பிளான் பண்ணி போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்களா?
ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. ஒருபுறம் வழக்கம் போல் பாடல் காப்பி என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்க உள்ள நிலையில், வாரிசு படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். பாலிவுட்டில் அனிமல் படத்தின் படப்பிடிப்பிற்கு மும்பை சென்றிந்த நடிகை ராஷ்மிகா மந்தனா அவசர அவசரமாக புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.
எம்மாடியோவ்....அழகு பொம்மாயி - காரில் ஒய்யாரமாக அமர்ந்து மாஸ் காட்டும் பூஜா ஹெக்டே!
இதே போன்று நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளே, ஒரு குட்டி கதை ஆகிய வசனங்களுக்கு சொந்தக்கார்ரான தளபதி விஜய்யும் வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்காக காரில் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் என்ன உடை அணிந்து வருவார், என்ன பேசுவார் என்பது குறித்தெல்லாம் அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சன் தொலைக்காட்சி நிறுவனம் விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
KGF3 படப்பிடிப்பு துவங்குவது எப்போது..! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்டால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
