பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா தற்போது, கார்த்திக்கு ஜோடியாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் தமிழில் நடிக்கா வில்லாட்டாலும், விஜய் தேவாரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதா கோவிந்தம் படம் பல தமிழ் ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, மீண்டும் விஜய் தேவாரகொண்டவுடன், 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இந்த  படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக, நடிகை ராஷ்மிகா பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார். அப்போது கூகுளில் இவரை பற்றியும், நடிகை சாய்பல்லவி பற்றியும் எழுந்த வதந்தி குறித்த ஒரு மீம்ஸை காட்டி கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர்.

அதில், சாய்பல்லவியை, ராஷ்மிகா மிரட்டியதாக எழுதப்பட்டிருந்தது. இதை படித்ததும், இது எப்போ நடந்துச்சு, நான் இப்போது தான் வளர்ந்து வருகிறேன். அவங்க வளர்ந்த நடிகை என சாய் பல்லவி பற்றி பெருமையாக பேசியுள்ளார். 

மேலும் ஏற்கனவே இது குறித்து சாய் பல்லவி, முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.