மதுரையைச் சேர்ந்த ராப் பாடகர் தேவ் ஆனந்த் என்பவரை, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் வழியில், கத்தி முனையில் கடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரையைச் சேர்ந்த இசைக்கலைஞர் தேவ் ஆனந்த். ராப் பாடகரான இவர், உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை சென்று இசை கச்சேரிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இவருடைய இசைக் கச்சேரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர், தன்னுடைய நண்பர்களுடன் சொந்த ஊரான மதுரைக்கு நண்பர்களுடன் புறப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் சென்னையில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில், இவர் சென்று கொண்டிருந்த காரின் மீது இருசக்கர வாகனம் ஒன்று உரசி விட்டு சென்ற நிலையில், காருக்கு சேதாரமாகியுள்ளதா? என்பதை பரிசோதிக்க காரில் இருந்து கீழே இறங்கினார். அப்போது திடீர் என வேனின் வந்த 10 பேர் கொண்ட ஒரு கும்பல், அவரை சுற்றி வளைத்து சினிமா பாணியின் கத்தியை காட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தி சென்றது.

வெறித்தனம்... வெறித்தனம்.. தாரை தப்பட்டைகள் கிழிய தளபதி குரலில் வெளியான 'நா ரெடி' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!

தேவ் ஆனந்த் கடத்தப்படுவதை தடுக்க நண்பர்கள் போராடிய நிலையில், முடியாமல் போனது. எனவே உடனடியாக இந்த சம்பவம் குறித்து, திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் கடத்தப்பட்ட தேவ் ஆனந்தை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் தேவ் ஆனந்த் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தன்னுடைய சகோதரர் இரண்டரை கோடி கடன் வாங்கிக்கொண்டு, தலைமறைவானதன் காரணமாக தான் இந்த கடத்தல் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

'லியோ' ஃபர்ஸ்ட் லுக் இந்த படத்தின் அட்ட காப்பியா? புகைப்பட ஆதாரத்தோடு படக்குழுவை போட்டு தாக்கும் நெட்டிசன்கள்!

இந்நிலையில் போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பின்னர், தற்போது மதுரையை சேர்ந்த ராப் இசைக்கலைஞரான தேவ் ஆனந்த், புதுக்கோட்டையில் பத்திரமாக மீட்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கடத்தலுக்கு பின்னணியின் இருப்பது யார்? உண்மையிலேயே தேவ் ஆனந்தின் சகோதரர் இரண்டரை கோடி பணம் வாங்கிக் கொண்டு தலைமறைவானாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். அண்ணன் வாங்கிய பணத்திற்காக தம்பியை ஸ்கெச் போட்டு தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.