வெறித்தனம்... வெறித்தனம்.. தாரை தப்பட்டைகள் கிழிய தளபதி குரலில் வெளியான 'நா ரெடி' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' படத்தில் இருந்து, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த 'நா ரெடி' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
 

thalapathy vijay starring leo movie naa ready first single released

தமிழ் திரையுலகின் வசூல் மன்னனான, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில், தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள 'லியோ' படத்திற்கு வரவேற்பு மட்டும் இன்றி எதிர்பாப்புகளும் அதிகமாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் விஜய் லோகேஷ் இயக்கத்தில் நடித்த 'மாஸ்டர்' பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது தான். எனவே இரண்டாவது முறையாக விஜய்யுடன் லோகேஷ் கை கோர்த்துள்ளதே இந்த எதிர்பார்ப்புகளுக்கு காரணம்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளர். வில்லனாக சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய வேடத்தில், பிரியா ஆனந்த், வையாபுரி, மடோனா செபாஸ்டியன், கதிர், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. 

லியோ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிலையில், விஜய்யின் காட்சியகம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் எனவும், அதற்க்கு மேல் மற்ற பிரபலங்களின் காட்சிகளை எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருபக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 'லியோ' பட நாயகன் விஜய் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருவதால், அவரின் பிறந்தநாளுக்கு... தளபதி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக  லியோ படத்தில் தளபதி பாடி, இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட செட் போட்டு, 2000 டான்சர்களுடன் நடனம் ஆடிய 'நா ரெடி' பாடலின் ஃபர்ஸ்ட் சைக்கிளை வெளியிட்டுள்ளது படக்குழு. 

அதன்படி நா ரெடி பாடல், சரியாக மாலை 6.30 மணிக்கு வெளியான நிலையில், தற்போது பட்டையை கிளப்பி வருகிறது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடலை, சமூக வலைத்தளத்தில் தளபதியின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு பக்கம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று இரவு முதலே ட்ரெண்ட் லிஸ்டில் இடம்பிடித்துள்ள நிலையில், இந்த லிரிக்கல் பாடலும் பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள 'நா ரெடி' பாடல் இதோ...

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios