Varisu: அடி தூள் 10 நாட்களின் ரஞ்சிதமே பாடல் செய்த சூப்பர் டூப்பர் சாதனை..! உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்..!

'வாரிசு' படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல்... மிகக் குறுகிய நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளதாக பட குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
 

Ranjithame song has reached a record of 50 million viewers

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களோடு தோல்வியை தழுவிய நிலையில், இதைத்தொடர்ந்து தற்போது விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் -  ராஷ்மிகா மந்தனா அட்டகாச ஆட்டத்தில், நவம்பர் 5ஆம் தேதி வாரிசு படத்தில் இருந்து விஜய் பாடிய, முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியானது. பாடல் வெளியான போதில் இருந்தே... தொடர்ந்து சமூக வலைதளத்தில் அதிகமான பார்வையாளர்களால் பார்த்து, ரசிக்கப்பட்டு வரும் இந்த பாடல் தற்போது 10 நாட்களில், 50 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.

ஒரே நாளில் பிறந்த அப்பா - அம்மாவுக்கு மிக பிரமாண்டமாக பர்த்டே கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் போட்டோஸ்!

Ranjithame song has reached a record of 50 million viewers

இதனை படக்குழுவினர் பாடல் வீடியோவில் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தளபதி ரசிகர்களும் படு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். 'ரஞ்சிதமே' பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாது. இந்த பாடலின், மியூசிக் பல்வேறு பாடல்களில் இருந்து  இசையமைப்பாளர் தமன் உருவியதாக கூறி நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்து வந்தனர். மேலும் இதற்க்கு இந்த பாடலின், பாடலாசிரியரான விவேக் தன்னுடைய விளக்கத்தையும் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை மகாலட்சுமி..? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்

Ranjithame song has reached a record of 50 million viewers

சாண்டி மாஸ்டரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முன்னாள் மனைவி காஜல்... வைரலாகும் புகைப்படங்கள்

இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தை, தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நேஷ்னல் கிரஷ் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், சங்கீதா, சரத்குமார், குஷ்பூ, ஜெயசுதா, பிரபு, உள்ளிட்ட  மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios