சாண்டி மாஸ்டரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முன்னாள் மனைவி காஜல்... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவரது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் சாண்டி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் இவர், நடிகை காஜல் பசுபதியை முதலாவதாக திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த விவாகரத்து முடிவுக்கு நான் தான் காரணம் சாண்டி மீது எந்த தவறும் இல்லை என காஜல் கூறி இருந்தார்.
காஜலை விவாகரத்து செய்த பின்னர் சில்வியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சாண்டி, இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. ஆனால் சாண்டியை பிரிந்த பின்னர் நடிகை காஜல் பசுபதி வேறு திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... விடாது கருப்பாய் துரத்தும் இரவின் நிழல் சர்ச்சை... எமோஷனல் ஆன இயக்குனர் பார்த்திபன்
இந்நிலையில், நடிகை காஜல் பசுபதி தனது முன்னாள் கணவர் சாண்டியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சாண்டி - சில்வியா ஜோடிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அதனை பார்க்க சென்றபோது எடுத்த புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் காஜல்.
சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் அவரது குழந்தைகளுடன் காஜல் பசுபதி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விவாகரத்து பெற்ற பின்னரும் சாண்டியுடனும், அவரது குடும்பத்தினருடனும் காஜல் பசுபதி நட்புடன் பழகி வருவதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... திருமணம் நெருங்கும் நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்