Ranbir wishes to Dulquer : இன்று மாலை 6 மணிக்கு ஹே சினாமிகா படத்திலிருந்து ரொமாண்டில் சிங்கிளை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளார்..என மாஸ்டர் பிருந்தா தெரிவித்துள்ளார்..

மானாட மயிலாட புகழ் கலா மாஸ்டரின் தங்கை பிரிந்தா மாஸ்டருக்கு சினிமாவில் பல நண்பர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக குஷ்பு இவரது நெருங்கிய தோழி என்று கூறலாம். குஷ்பு மூலமாகத்தான் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன் பிறகு கமலுடன் நம்மவர் படத்தில் சேர்ந்து நிர்மலா எனும் கதாபாத்திரத்தில் பிருந்தா மாஸ்டர் நடித்திருப்பார். 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தில் ஒரு பாடலுக்கு கோரியோகிராபர் ஆக பணியாற்றி இருப்பார்.

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ஹே சினாமிகா'. கொரோனா ஊரடங்குக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு.

இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படம் வரும் பிப்ரவர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முன்னதாக அச்சமில்லை அச்சமில்லை பாடல் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது..இதைத்தொடர்ந்து செகண்ட் சிங்குளாக தோழி என்னும் பாடல் வரிகள் வெளியாகியுள்ளது.. கோவிந்த் வசந்தா இசையில் மெல்லிசை பாடும் இந்த பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார்..இதன் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு ஹே சினாமிகா படத்திலிருந்து ரொமாண்டில் சிங்கிளை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளார்..என மாஸ்டர் பிருந்தா தெரிவித்துள்ளார்..

Scroll to load tweet…
Scroll to load tweet…

இந்நிலையில் பாலிவுட் பிரபலம் ரன்பீர் கபூர்... ஹே சினாமிகா படம் தொடர்பாக நடிகர் துல்கர் சல்மான், பிருந்தா உள்ளிட்ட படக்குழுவினருக்கு வலது தெரிவித்துள்ளார்.. ஹி சினாமிகா படம் வரும் மார்ச் 3-ல் உலக முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.. 

Scroll to load tweet…
Scroll to load tweet…