நடிகர்கள் என்றாலே அவர்கள் எது செய்தாலும் அது பெரிதாக பேசப்படும் அதிலும் அவர்கள் முன்னணி நடிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சாதாரண விஷயமாக இருந்தாலும் அது  வைரலாகிவிடும். 

சஞ்சய் தத்:

பாலிவுட் திரையுலகில் சர்ச்சைக்கு பேர் போன நடிகர் சஞ்சய்தத். இவர் கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து 5 ஆண்டுகள் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான்.

படங்களில் பிஸியான சஞ்சய்:

சிறைவாசம் முடிந்து 2016-ம் ஆண்டு வெளியே வந்த சஞ்சய்தத் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.

வாழ்க்கை வரலாறு படம்:

இந்நிலையில் தற்போது, நடிகர் சஞ்சய்தத்தின் அனுமதியோடு இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தில் சஞ்சய்தத் கதாப்பாத்திரத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். 

உலகம் முழுவதும் நாளை இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார் நடிகர் ரன்பீர் கபூர்.

போதைக்கு அடிமை:

இந்த படத்தில் நடிகர் சஞ்சய்தத் அவருடைய சிறு வயதில் , போதை பொருளுக்கு அடிமையாகி தெருத்தெருவாய் பிச்சை எடுத்தது மற்றும் குப்பை பொறுக்கிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார் ரன்பீர் சிங். 

சுமார் 10 ஆண்டுகள் போதை பழக்கத்திற்கு அடிமையாய் இருந்த சஞ்சய்தத் பின் பல்வேறு கஷ்டங்களுக்கு பின் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளார் என்கிற தகவலை வெளியிட்டுள்ளார் ரன்பீர். மேலும் 'சஞ்சு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.