இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான “பாகுபலி” படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றவர் ராணா. நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட் சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர் என திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். பல ஆண்டுகளாக முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, மே12ம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் போட்டோவுடன் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

 

இதையும் படிங்க: துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...!

இதனையடுத்து இருவீட்டாரும் சந்தித்து பேசக்கூடிய ரேகா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளை கெட்டப்பில் ராணாவும், பட்டுப்புடவையில் மிஹீகாவும் சும்மா தகதகவென ஜொலித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

 

 

தற்போது ராணா - மிஹீகாவின் திருமணம் இன்று ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் நடக்க உள்ளது. இதில் 30 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இரு வீட்டார் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும், இதனால் நெருங்கிய நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என யாருக்கும் அழைப்பு இல்லை என்றும் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு தெரிவித்திருந்தார். 

 

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

திருமணத்திற்கு வந்துள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் திருமண பந்தத்தில் இணைய உள்ள ராணா - மிஹீகாவின் கலக்கலான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 6ம் தேதி ராணா-  மிஹீகாவிற்கு சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக சோழிகள் மற்றும் பூக்களால் செய்யப்பட்ட ஆபரணம், அதற்கு ஏற்ற போல் மஞ்சள் நிற உடை என மங்களகரமாக தயாராகி இருந்தார் மிஹீகா.  நேற்று பிங்க் நிற உடையில் அழகு தேவதையாய் ஜொலித்த மிஹீகாவின் மெகந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் வெளியான. தற்போது ராணா தான் திருமணத்திற்கு தயார் என்பதை தெரிவிக்கும் விதமாக அப்பா சுரேஷ், மாமா வெங்கடேஷ் உடன் கெத்தாக நிற்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.