ramsaran teja acting lord rama

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வெளிவந்த பாகுபலி திரைப்படம் உலக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளதால், தற்போது கோடிகளை செலவழித்து படம் எடுக்க முன்வந்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதிகாசங்களில் ஒன்றான 'இராமாயணம்' திரைப்படம் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தை ரூ.500 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.

இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான, ராமர் கேரக்டரில் ராம்சரண் தேஜா நடிப்பது போல் தோன்றும் போஸ்டர்கள் இணையதளத்தில் வெளியானது. 

இந்த போஸ்டர் அதிகாரபூர்வ போஸ்டர் இல்லை என்றாலும் தயாரிப்பாளர் தரப்பிலும், ராம்சரண் தரப்பிலும் இது வரை இந்த போஸ்டர் குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவே ராமர் கேரக்டரில் ராம்சரண் தேஜா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.