ராம் சரணின் மனைவி உபாசனாவும், அவரின் தாத்தா பிரதாப் ரெட்டியும் ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உடனடி மற்றும் மருத்துவ சேவையை வழங்குவதற்காக அதிநவீன அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தனர்.

பிரபல நடிகர் ராம் சரணின் மனைவியும் தொழிலதிபருமான உபாசனா கொனிடேலா சமீபத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்றார். ஜனவரி 22 அன்று நடந்த பிரம்மாண்ட கும்பாபிஷேகத்தில் ராம சரண் கலந்து கொண்ட நிலையில், அதில் உபாசனா கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தனது தாத்தா பாட்டியுடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்பல்லோ நிறுவனர் மற்றும் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபாசனா. தனது தாத்தா பிரதாப் சி ரெட்டி மற்றும் பாட்டி சுசரிதா ரெட்டி ஆகியோர் உடன் தற்போது அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.. இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட அவர், தெய்வீக அனுபவம் என்று தெரிவித்துள்ளார்..

View post on Instagram

அயோத்தியில் அப்பல்லோ மருத்துவமனை சேவைகளை உபாசனாவும் அவரின் தாத்தாவும் தொடங்கி வைத்தனர். ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உடனடி மற்றும் மருத்துவ சேவையை வழங்குவதற்காக அதிநவீன அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தனர்.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்ட அவர், "ராம் லல்லாவின் ஆசியுடன், அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கான சேவையாக எங்களின் இலவச அவசர சிகிச்சை மையத்தைத் திறப்பதை அப்பல்லோ அறக்கட்டளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. தாத்தாவின் தொலைநோக்குப் பார்வையில் நம்பிக்கை கொண்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு மிக்க நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

View post on Instagram

உ.பியில் 300 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக உபாசனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.. இதயம்/கல்லீரல்/சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான உரிமம் பெற்ற லக்னோவில் உள்ள ஒரே தனியார் மருத்துவமனை இதுதான். இவை அடிப்படை முதலுதவி முதல் மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் வரை சிறந்த அவசர சேவைகளை வழங்கும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு 24 மணி நேர அவசர கவனிப்பு ' மற்றும் 'ஐசியூ பேக்அப்' ஆகியவற்றை மருத்துவமனை வழங்கும். மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.