rajinikanth wish the meyatha maan team

இயக்குனர் ரத்னா குமார் இயக்கி தீபாவளி அன்று வெளியான படம் மேயாத மான். இந்தப் படத்தில் சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானி மற்றும் வைபவ் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தயாரித்துள்ளார்.

மெர்சல் பீவரில் இருந்து மீண்ட பலரது கண்களில் இந்தப் படம் பட்டது..அதை அடுத்து, இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கார்த்தி சுப்புராஜ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'இது சிறந்த பொழுது போக்குப் படம்" என்று கூறி வாழ்த்தியதாக பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…