மு.க.ஸ்டாலின் முதல் தனுஷ் வரை... பிறந்தநாளன்று வாழ்த்தியவர்களுக்கு லிஸ்ட் போட்டு நன்றி சொன்ன ரஜினிகாந்த்

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Rajinikanth thanking all the celebrities who convey wishes on his birthday

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். வழக்கம்போல் ரஜினியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடினர். அதேபோல் பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும் ரஜினிக்கு வாழ்த்து மழை பொழிந்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் திரு. ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிச்சமி, திரு 0. பன்னீர் செல்வம், திரு. அண்ணாமலை, திரு.T.K. ரங்கராஜன், திரு. வைக்கோ, திரு. அன்புமணி ராமதாஸ், திரு. G.K. வாசன், திரு. திருநாவுக்கரசு, திரு. A. C. ஷண்முகம், திரு. தொல் திருமாளவன், திரு. சீமான் அவர்களுக்கும், மத்திய, மாநில முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இதையும் படியுங்கள்... நடிச்சது ஒரே ஒரு விளம்பரம்.. அதன்பின் கோடி ரூபாய் கொடுத்தாலும் விளம்பரங்களில் ரஜினிகாந்த் நடிக்க மறுப்பது ஏன்?

Rajinikanth thanking all the celebrities who convey wishes on his birthday

திரையுலகை சேர்ந்த நண்பர் திரு. கமலஹாசன், திரு. இளையராஜா, திரு. வைரமுத்து, திரு. ஷாருக்கான், திரு.அக்ஷய் குமார், திரு. மோகன்லால், திரு. மம்மூட்டி, திரு. சிவராஜ்குமார், திரு. சரத்குமார், திரு. உதயநிதி ஸ்டாலின், திரு. தனுஷ், திரு சிவகார்த்திகேயன் மற்றும் திரையுலகத்தை சார்ந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

விளையாட்டு மற்றும் பல துறைகளிலிருந்து எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த திரு. சச்சின் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பொது மக்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”  என அந்த அறிக்கையில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... முத்துவேல் பாண்டியனாக கெத்து காட்டும் ரஜினிகாந்த் - பிறந்தநாள் பரிசாக வெளியானது ‘ஜெயிலர்’ கிளிம்ப்ஸ் வீடியோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios