ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தை முழு வீச்சில் நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் "தலைவர் 168" படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஷூட்டிங் ஆரம்பிக்க திட்டமும் போட்டாகிவிட்டது. அதன் பின்னர், அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ள ரஜினிகாந்த், இறுதியாக "தலைவர் 169" என்ற படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: மாமனாருக்கு அடுத்து மருமகனை வளைத்துப் போட்ட தயாரிப்பு நிறுவனம்... அடுத்தடுத்து பட்டையைக் சன் பிக்சர்ஸ்...!

அந்தப் படத்தை முதலில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்  தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் "தலைவர் 169" படத்தை அவரது மூத்த மருமகனும், நடிகருமான தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணை தயாரிப்பை கலைப்புலி எஸ்.தாணுவும், இயக்கத்தை வெற்றிமாறனும் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான தனுஷ், எப்படியாவது தலைவர் உடன் ஒரு படத்தில் நடித்துவிட மாட்டோமா? என்ற ஆசையில் உள்ளாராம். அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த தனுஷ், "தலைவர் 169" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் சொன்னது நிஜம் தான்பா... செம்ம கிளாமர் லுக்கில் நயன்தாரா... தர்பார் ட்ரெய்லரை கொண்டாடும் நயன் ஃபேன்ஸ்...!

சூப்பர் ஸ்டாரின் பொங்கல் விருந்தாக "தர்பார்" படமும், தீபாவளி சரவெடியாக "தலைவர் 168" படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு அடுத்து "தலைவர் 169" படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த படத்திலாவது மாமனாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற நம்ம நடிப்பு ராட்சசன் தனுஷின் ஆசை நிறைவேறுமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.