தற்போது ரஜினியின் அடுத்த படத்தை தொடர்ந்து, அவரது மருமகன் தனுஷை வைத்து படம் இயக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. சூப்பர் ஸ்டாரின் 168வது படத்தை குறிக்கும் விதமாக தலைவர் 168 என பெயரிப்பட்டுள்ள நிலையில், தனுஷின் 44வது படமான இதற்கு D44 என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டிங் கிங்கான சன்பிக்சர்ஸ், தங்களது நிறுவனம் தயாரிக்கும் படங்களை பட்டி, தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்துவிடும். அப்படிப்பட்ட சன்பிக்சர்ஸ் நிறுவனம் தொட்ட படமெல்லாம் வெற்றி தான். தற்போது "தர்பார்" படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்க உள்ள "தலைவர் 168" படத்தில் நடிக்க உள்ளார்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள அந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், பரோட்டா சூரி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். "தலைவர் 168" படத்தின் ஷூட்டிங் அதற்கு பதிலாக ஐதராபாத்தில் டிசம்பர் 17ம் முதல் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ள ஷூட்டிங்கில் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ரஜினியின் அடுத்த படத்தை தொடர்ந்து, அவரது மருமகன் தனுஷை வைத்து படம் இயக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. சூப்பர் ஸ்டாரின் 168வது படத்தை குறிக்கும் விதமாக "தலைவர் 168" என பெயரிப்பட்டுள்ள நிலையில், தனுஷின் 44வது படமான இதற்கு "D44" என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கிய பாண்டியராஜ் இப்படத்தையும் இயக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
