சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' (Annaatthe) படம் வரும் தீபாளிக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் சென்சார் குறித்த தகவலை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) 'அண்ணாத்த' (Annaatthe) படம் வரும் தீபாளிக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் சென்சார் குறித்த தகவலை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முழு கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவர்கள் இருவரில் ஒருவரா? பரபரப்பு தகவல்...

அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடிய அறிமுக பாடலான 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடலான 'சார காற்றே' பாடல் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்: மனைவியை அடித்து கொடுமை படுத்திய பிக்பாஸ் அபிஷேக்..! முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட தீபா..!

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அதிரடி சரவெடியாக வெளியான இந்த படத்தின் டீசரில், தலைவர் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கவிட்டிருந்தார். இப்படி அடுத்தடுத்து மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டு வரும் சன் பிச்சர்ஸ் நிறுவனம், தற்போது 'அண்ணாத்த' படத்தின் சென்சார் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்: ஹீரோயினாகும் 'தெய்வமகள்' அண்ணியாரின் மகள்.. ஆரம்பமே இப்படியா? பாத் டப்பில் படுத்து கவர்ச்சி அட்டகாசம்!

அண்ணாத்த படத்திற்கு யு / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, இந்த தகவலை படக்குழு தற்போது அதிகார பூர்வமாக தெரிவிக்க தலைவர் ரசிகர்கள் வேறு லெவலுக்கு இதனை கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் நீண்ட இடைவெளிக்கு பின், குஷ்பு மற்றும் மீனா இருவரும் இந்த படத்தின் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…