Rajinikanth Lifetime Achievement Award for his contribution cinema at IFFI : கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சினிமா துறையில் ரஜினிகாந்த் ஆற்றிய பங்கிற்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவாவில் 56ஆவது ஆண்டு சர்வதேச திரைப்பட விழா

கோவாவில் 56ஆவது ஆண்டு சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த படங்கள் இடம் பெற்றன. அதில் அமரன், பிறந்தநாள் வாழ்த்துக்கள், லால் சலாம் உள்பட கிட்டத்தட்ட 240க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் நிறைவு நாளான இன்று விழாவில் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இதில் லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விசாகன், யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சினிமா துறையில் ரஜினிகாந்த் 50 ஆண்டு நிறைவு செய்துள்ள நிலையில் திரைத்துறையில் அவரது பங்களிப்பை பறைசாற்றும் வகையில் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது பேசிய ரஜினிகாந்த், மத்திய அமைச்சர் முருகன் உள்பட அனைவருக்கும் நன்றி. என்ன வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்கள். விழா நிகழ்ச்சியின் போது பேசிய ரன்வீர் சிங் ரஜினிகாந்தை பற்றி பேசுவதற்கு என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. டைகர் ஹா ஹூக்கூம். ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறேன். எனக்கு சினிமாவும், நடிப்பும் ரொம்பவும் பிடிக்கும். அந்த இரண்டையும் நான் நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…