rajinikanth kamal movie production kavithalaiya Foreclosures
1981 ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'நெற்றிக்கண்' படத்தை முதல் முறையாக தயாரித்த நிறுவனம் கவிதாலயா. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சரிதாவை வைத்து புதுகவிதை படத்தை தயாரித்தது. கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தில் வெளிவந்த 'அச்சமில்லை அச்சமில்லை', 'ஒரு வீடு இரு வாசல்' ஆகிய படங்கள் சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றவை.
இது வரை ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், முரளி, விக்ரம், மாதவன், ஜெயம்ரவி என பல முன்னணி நடிகர்களை வைத்து 70 வதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம் தற்போது ஏலத்திற்கு வர உள்ளது என பிரபல ஆங்கில நாளிதழ் செய்து வெளியிட்டுள்ளது. 
வங்கியில் பெற்ற ஒரு கோடியே 36 லட்சம் கடனை செலுத்தாததால் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை அபிராமபுரத்தில் உள்ள கவிதாலயா புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் கட்டடங்கள் மற்றும் வீடு ஆகியவை ஏலத்துக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மட்டும் இன்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல வெற்றிப்படங்களை குவித்த நிறுவனமான கவிதாலயா தயாரிப்பு நிறுவன சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ளது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் பிரபல இயக்குனர் கே.பாலசந்தரின் சொந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
