தமிழ் சினிமாவில் வெற்றிகரமான படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

தமிழ் சினிமாவுக்கு இந்த மாதம் ஒரு சோகமான மாதமாகவே அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரும், நடிகருமான கே.விஸ்வநாத் காலமானார். இதையடுத்த சில தினத்தில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கு அடுத்தபடியாக பிரபல இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான டிபி கஜேந்திரன் கடந்த ஞாயிறன்று இயற்கை எய்தினார். இப்படி தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து மரணமடைந்து வரும் நிலையில், தற்போது மற்றுமொரு சோகமான செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... வேலையே இல்ல.. கடும் மன உளைச்சல் வேற... அட பாவமே தனுஷூக்கே இந்த நிலைமையா..!

அதன்படி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி இன்று காலமானார். அவருக்கு வயது 76. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி, தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான காளி, கர்ஜனை உள்பட ஏராளமான படங்களை இயக்கியவர் ஆவார். இவரின் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதேபோல் பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஆர்.ஜே.பாலாஜி, ஜிவி பிரகாஷ் அணிந்திருந்த டீ-சர்ட் விலை இத்தனை லட்சமா..! அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?