ஆர்.ஜே.பாலாஜி, ஜிவி பிரகாஷ் அணிந்திருந்த டீ-சர்ட் விலை இத்தனை லட்சமா..! அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?
நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் லட்ச ரூபாய் மதிப்புள்ள டீ-சர்ட் அணிந்திருந்த தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
சினிமா நட்சத்திரங்கள் மீது அதீத அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள், தற்போது அவர்கள் அணியும் உடை, அணிகலன்கள், காலணிகள் என ஒவ்வொன்றையும் கவனித்து அதேபோன்று அணிய ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படித் தான் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் ஒரு விருது நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்திருந்த டீ-சர்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. உடனே அதன் பிராண்ட் பெயரை இணையத்தில் தேடி பார்த்த பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் அந்த டீ-சர்ட்டின் விலை ரூ.40 ஆயிரத்திற்கு மேல் இருந்தது. குறிப்பிட்ட இந்த பிராண்டை தோனி, ஷாருக்கான், சிம்பு என ஏராளமான திரைப்பிரபலங்கள் பயன்படுத்தி வருவது பின்னர் தெரிய வந்தது. அதேபோல ஒரு சம்பவம் தான் தற்போது மீண்டும் நடந்துள்ளது. நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் ஆர்.ஜே.பாலாஜி நடித்த ரன் பேபி ரன் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... என்னது 300 கோடியா... இது உலக மகா உருட்டு..! வாரிசு பட கலெக்ஷனை விமர்சித்த பிரபலம்
அப்படத்தின் ரிலீசுக்கு முன்னர், அப்படத்தை ஆர்.ஜே பாலாஜி புரமோட் செய்த விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பெரும்பாலான யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தது மட்டுமின்றி, ரியாலிட்டி ஷோ, சீரியல் என திரும்பிய பக்கமெல்லாம் அவரது முகம் தான் ஆக்கிரமித்து இருந்தன. அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு ஆர்.ஜே.பாலாஜி டீ-சர்ட் ஒன்றை அணிந்து வந்திருந்தார்.
அதே போன்ற ஒரு டீ-சர்ட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சமீபத்தில் நடந்த வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அணிந்து வந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன? உடனடியாக அதைப்பற்றிய விவரங்களை சேகரிக்கத் தொடங்கினர். அதன்படி அது லூயிஸ் வியூட்டன் என்கிற பிராண்ட் எனவும் அதன் விலை ரூ.1 லட்சம் என்பதையும் கண்டுபிடித்து வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பெயருக்கு பின்னால் சாதி எதற்கு... தூக்கியெறிந்த தனுஷ் பட நடிகைக்கு குவியும் பாராட்டு