Asianet News TamilAsianet News Tamil

ஏர்போர்ட்டில் நடந்த தள்ளுமுள்ளு? அதிரடியாக கைதான "ஜெயிலர்" விநாயகன் - நடந்தது என்ன?

Actor Vinayakan : பிரபல மலையாள நடிகர் விநாயகன், ஹைதராபாத்தில் உள்ள விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

rajinikanth jailer fame actor vinayakan arrested in Hyderabad airport ans
Author
First Published Sep 7, 2024, 11:57 PM IST | Last Updated Sep 7, 2024, 11:57 PM IST

கேரளா திரையுலகில் கடந்த 1995ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விநாயகன். தமிழ் மொழியை பொறுத்தவரை கடந்த 2006ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான "திமிரு" திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். தொடர்ச்சியாக தமிழில் "சிலம்பாட்டம்", "எல்லாம் அவன் செயல்", "காலை" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தவர், இறுதியாக கடந்த 2013ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "மரியான்" திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நெல்சன் திலீப்குமாரின் "ஜெயிலர்" திரைப்படத்தில் "வர்மன்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தமிழ் திரை உலகில் அவருக்கு ஜெயிலர் திரைப்படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நடிப்பை பொறுத்தவரை தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்து முடிக்கும் விநாயகன், சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனால் தான் அவர் "ஆண்டவர்".. 69 வயதிலும் அமெரிக்காவிற்கு படிக்கச்சென்ற கமல் - பரபரப்பு தகவல்!

ஏற்கனவே கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தில் அவரை கைது செய்ய வந்த போலீசாரையே அவர் மிரட்டியதாக சில குற்றச்சாட்டுகள் அவர் மீது இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்சாபாத் விமான நிலைய போலீசார் அவரை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. கொச்சியில் படப்பிடிப்பில் இருந்த விநாயகன், அங்கிருந்து கோவாவிற்கு சென்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது தன்னுடைய கனெக்டிங் பிளைட்டுகாக ஹைதராபாத்தில் உள்ள சம்சதாபாத் விமான நிலையத்தில் அவர் தரங்கி இருக்கிறார். அப்போதுதான் நடிகர் விநாயகர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமான நிலைய ஊழியர்கள் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டு, தன்னை தனியறையில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக விநாயகன் கூற, நடிகர் விநாயகன் தான் விமான நிலையத்தில் பாதுகாப்பாக இருந்த CISF போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாகவும், அவர் மது அருந்தி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதாகவும் போலீசார் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

"பேசியே எல்லாரையும் ஓடவிட போறாப்ல" பிக் பாஸ் சீசன் 8 - களமிறங்குகிறாரா அந்த மாஸ் நடிகர்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios