பிரபல இயக்குனர் புட்டன்னாகனகல் மூலம் அறிமுகமான அம்பரீஷ், சுமார் 208 படங்கள் நடித்துள்ளார். இதில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி மொழி படங்களும் அடங்கும்.  தமிழில் இவர் நடித்த பிரியா புகழ் பெற்ற படம் ஆகும். 
1998–1999, 1999–2004,2004–2009 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2006 to 2008.மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராகவும்,  2013_2016 கர்நாடக அமைச்சராகவும் இருந்துள்ளார்.கலைத்துறையில் ஈடுபட்டதற்காக நந்தி விருது, பிலிம் பேர் விருது, மாநில அரசு விருதுகள் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அம்பரீஷ் மறைந்த செய்தியை அறிந்த சூப்பர்ஸ்டாரும் அம்பரீஷின் நெருங்கிய நண்பருமான நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒரு அருமையான மனிதர்.. எனது சிறந்த நண்பர்... உங்களை இன்று இழந்து விட்டேன்” என்று அம்பரீஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.