தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்த ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்த சிரஞ்சீவி ஆகியோருக்கு நடிப்புப் பயிற்சி அளித்த நடிகர் தேவதாஸ் கனகலா உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

தமிழ் சினிமாவில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், ஒரு சில படங்களை இயக்கியும் உள்ளவர் தேவதாஸ் கனகலா. தற்போது 75 வயதாகும் இவர், கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இவர் மரணமடைந்துள்ளது, தெலுங்கு திரையுலகினர் மற்றும் தமிழ் திரையுலகினர் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க பயிற்சி அளித்தவர்.

அதேபோல் சிரஞ்சீவி, ராஜேந்திர பிரசாத், நாசர், உள்ளிட்ட திரையுலகில்  நிலையான இடத்தை பிடித்த, பல நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தவர்.  மேலும் சென்னையில் 'மெட்ராஸ் இன்ஸ்டிடியூட்' என்கிற பயிற்சி பள்ளியையும் நடத்திவருகிறார்.  

இவருடைய மகள் சுமா, டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.  இவரது மகன் ராஜூவ் தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் இவர் இறந்த செய்தி அறிந்த திரையுலகினர் மட்டுமில்லாமல், இவருடைய  மறைவுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பல அரசியல் தலைவர்கள், தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.