சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் துவங்க உள்ள கட்சி குறித்த பேசுவதற்காக, ஒரு வருடத்திற்கு பின் மாவட்ட செயலாளர்களை போயஸ் தோட்டத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பில் போது, நிறைய விஷயம் பற்றி மாவட்ட செயலாளர்களிடம் பேசியதாக தெரிவித்தார். ஆனால் தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் ஏற்பட்டதாக ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

மேலும் சி.ஏ.ஏ விவாகாரம் குறித்து, பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், முறையாக அனுமதி பெற்று பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமிய அமைப்புகளிடம் கூறியுள்ளதாக அவர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.