வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் பல்வேறு பகுதியில் ஹோலி பண்டிகை மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகையின் போது, வண்ண பொடிகளை வயது வித்தியாசம் இன்றி ஒருவர் மீது ஒருவர் பூசி விளையாடி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மட்டும் இன்றி, ஆட்டம் பாட்டம் என அன்றைய தினம் கலை காட்டும்.

அந்த வகையில் நேற்று பிரபலங்கள் பலரும் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலைலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய செல்ல மகள்களுடன் கொண்டாடி மகிழ்ந்த, புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மகள் சௌந்தர்யாவை விட அதிகமான கலர் பொடிகள் ரஜினியின் மீது தான் உள்ளது.

அந்த புகைப்படம் இதோ...