நடிகர் ரஜினிகாந்த் பலருக்கும், வெளியுலகிற்கு தெரியாதவாறு உதவிகள் செய்து வருகிறார், இதன் காரணமாகவே பல ரசிகர்கள் இவர் அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அவரோ அரசியல் வாய்ப்புகள் அவரை தேடி வந்தாலும், அனைத்தையும் ஒதுக்கிவிட்டு திரைப்பட வாழ்க்கை மற்றும் ஆன்மீகத்தில் மட்டுமே தொடர்ந்து ஆர்வம் காட்டிவந்தார்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் நிலவும் சில அதிரடி மாற்றங்களால், மக்களே குழப்பத்தில் உள்ளனர்.
இதனால் தற்போது அரசியலில் இறங்கும் மனநிலையில் ரஜினி உள்ளதாக கூறப்படுகிறது . இதுகுறித்து பேச ரஜினிகாந்த் வரும் மார்ச் மாதம் ரசிகர்களை ஒன்று திரட்டி பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
இதற்காக அணைத்து மாவட்டங்களில் இவருடைய ரசிகர்களை கணக்கெடுக்கும் பணி ரகசியமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது, மேலும் ரஜினி பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகவும் ரசிகர்களுடன் கலந்தாலோசித்து அரசியல் குறித்த முடிவை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.
