இயக்குநர் சிவாவை  ரஜினி சந்தித்ததுப் பேசியது அவரது ‘விஸ்வாசம்’ படத்தையும் அஜீத்தின் நடிப்பையும் பாராட்டுவதற்காகத்தானே அடுத்த படம் சேர்ந்து பண்ணுவதற்காக அல்ல என்று சூப்பர் ஸ்டார் தரப்பு அவசர அவசரமாக மறுத்துள்ளது. இந்த மறுப்புச் செய்தியால் ஒரு சூழ்ச்சி இருப்பதாகத் தெரிகிறது.

‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இயக்குநர் சிவாவின் அடுத்த படம் குறித்து அரைடஜனுக்கும் மேற்பட்ட வதந்திகள் நடமாடிவந்த நிலையில் அவர் கடைசியாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் சூர்யாவை ஹீரோவாக வைத்து படம் இயக்க ஒப்பந்தமானார். அது தொடர்பாக சூர்யா,சிவா,ஞானவேல் ராஜா ஆகிய மூவரும் இடம்பெறும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஆனால் ஞானவேல்ராஜாவின் முந்தைய தயாரிப்பான சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படுபரிதாபமாக தோல்வி அடைந்ததால் அவர் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாகவும், சூர்யா-சிவா காம்பினேஷன் படத்தை உடனே தொடங்குவதில் சிக்கல் உள்ளதாகவும் ஒரு ரகசிய தகவல் நடமாடிவருகிறது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்பியே ரஜினி நேற்று அவசர அவசரமாக சிவாவை வரவழைத்துக் கதை கேட்டதாகவும் இந்த கேப்பில் மீண்டும் அஜீத் புகுந்து மறுபடியும் ஒரு ‘விஸ்வாசக் கூட்டணி உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு சந்திப்பு நடந்தது . அதில் ஒரு டைரக்டரிடம் ரஜினி கதை கேட்டார் என்ற செய்திகளுக்கு அவசர மறுப்பு சொல்லப்படுவதற்கு வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்?