நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகன் ஆகியோர் லண்டன் விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு  பலமணி நேரம் தவித்ததாக தகவல் வெளியாகி  உள்ளது. 

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், தொழிலதிபரான விசாகன் என்பவரை சமீபத்தில் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில்  விசாகனும் ,சௌந்தர்யாவும் லண்டன் சென்றுள்ளனர் அங்கு விமான நிலையத்தில் அவர்கள் நுழைந்த போது அங்கிருந்த மைகிரண்ட் அதிகாரிகள்  விசாகன் சௌந்தர்யா தம்பதிகளிடம் பாஸ்போர்ட் கேட்டனர். அப்போது பையிலிருந்து பாஸ்போர்ட் எடுக்க முற்பட்டபோது பாஸ்போர்ட் வைக்கப்பட்டிருந்த பை மாயமாகி இருந்தது. தங்களின் லக்கேஜ் பேக் திருடப்பட்டிருப்பதை பின்னர் உணர்ந்துகொண்ட விசாகன் மற்றும சௌந்தர்யா  அதிர்ச்சியடைந்ததுடன் நீண்ட நேரமாக விமான நிலையத்திலேயே செய்வதறியாது திகைத்தனர்.  

காணாமல்போன போகில்தான் சௌந்தர்யா மற்றும் விசாகன் ஆகிய இருவரின் பாஸ்போர்ட் மற்றும் பல லட்ச ரூபாய் அமொரிக்க டாலர்களும்  இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்த அவர்கள் பயணம் செய்த எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகளிடம் பை காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். பையை விமானத்தில்  நீண்ட நேரம் தேடியும் அது கிடைக்கவில்லை.  இதற்கிடையில் பாஸ்போர்ட்டை இல்லாததால் சௌந்தர்யா மற்றும் விசாகன் இருவரும் விமான நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.இதானல் அவர்கள் இருவரையும் பாஸ்போர்ட் கிடைக்கும் வரை தனியறையிலேயே காத்திருக்கும்படி விமான நிலைய அதிகாரகள் பிடித்து அமரவைத்து விட்டனர்.  உடனே நடந்தவைகள் குறித்து அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகளிடம் விசாகன் புகார் தெரவித்தார். நிலைமை குறித்து உடனே இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் சொல்லப்பட்டு  தூதரக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்தனர். 

அவர் வந்து விசாரித்ததற்கு பின்தான் தெரிந்தது  சௌந்தர்யா,விசாகன் ரஜினியின் மகள், மருமகன் என்று.  உடனே இந்திய தூதரக அதிகாரிகளின் சிபாரிசு செய்ததின்  பேரில் மாதிரி பாஸ்போர்ட் பெற்றுக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் விமான நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், விசாகன் சௌந்தர்யாவின் பையை திருடயது யார் என்பது குறித்து சிசிடீவி கேமாரா கட்சிகளின் மூலம் லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.