Rajini congratulates Mersal team The film is special

பல தடைகளைத் தாண்டி கடந்த தீபாவளியன்று வெற்றிகரமாக திரைக்கும்வந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது மெர்சல்.

அரசியல்வாதி ஒருவர் படத்தில் ஜி.எஸ்.டி குறித்த காட்சிகளை நீக்க சொன்ன அடுத்த நொடி படத்தின் புரோமோசன் இந்தியா முழுக்க பரவியது. டிவி விவாதங்கள் என மெர்சல் ஹேஷ்டாக் டிவிட்டியது.

மெர்சல் படத்தை பார்க்க கூடாது என வைராக்யமாக இருந்தவர்களை கூட அந்த அரசியல்வாதியின் கருத்து தூண்டிவிட்டு மெர்சலை பார்க்க வைத்துள்ளது.

பத்து பைசா செலவில்லாமல் ஒத்த வார்த்தையால் பப்ளிசிட்டி தேடித் தந்த அந்த அரசியல்வாதிக்கு நன்றி சொல்லி மீம்ஸ் கூட வெளியிட்டனர் தளபதி ரசிகர்கள்.

இந்த நிலையில், இந்தப் படத்தைப் பாராட்டி நடிகர் ரஜினி டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு: “மிக முக்கிய பிரச்சனையைப் படத்தில் பேசியுள்ளார்கள், சிறப்பாக உள்ளது! மெர்சல் படக்குழுவிற்கு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த அரசியலுக்கு வர ஆயத்தமாகி கொண்டிருக்கும் வேளையில் மெர்சலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஆனால், ஜி.எஸ்.டி என்ற அந்த வார்த்தையை கூட சொல்லாமல் முக்கிய பிரச்சனை என்று குறிப்பிட்டு இருப்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.