தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இயக்குனர் நெல்சன்,அனிரூத் இசை, சூப்பர் ஸ்டார் இடம்பெற்றுள்ளார். கருப்பு நிற கோர்ட்டில் ரஜினி செம மாஸ் ஸ்டைலில் கலக்கி உள்ளார்..அறிமுகத்திற்காகவே தனி ப்ரோமோ எடுக்கப்படுள்ளது..
அண்ணாத்த வெற்றிக்கு பிறகு ரஜினி யாருடன் இணையவுள்ளார் என்பது மிகப்பெரிய சஸ்பென்ஸாகவே இருந்து வந்தது... இடையிடையே இயக்குனர் சிவாவுடன் மீண்டும் ரஜினி இணைவார் என்றும் கூறப்பட்டது.. பின்னர் டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் ரஜினியை 169 வது படத்தை இயக்குவார் என கூறப்பட்டது.. இதற்கிடையே ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பெயரை இரண்டு நாட்களாக ட்ரெண்டாக்கி வந்தனர்..

இவ்வாறு பல முடிச்சுக்கள் போடப்பட்டிருந்த நிலையில் ரஜினி 169 வது வாய்ப்பை இளம் இயக்குனர் நெல்சன் தட்டி துக்கியுள்ளார்.. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.. அதோடு நெல்சனுடன் மூன்றாவது முறையாக அனிரூத்தும் இந்த புதிய திட்டத்தில் இணைந்துள்ளார்..

ரஜினி 169 குறித்த அறிமுக செய்திக்கென தனி ப்ரோமோவே தயாரிக்கப்பட்டுள்ளது.. இந்த வீடியோவில் முதலில் இசையமைப்பாளர்..பின்னர் இயக்குனர் பிளாக் நிற கோட் சூட்டில் அறிமுகமாக..நம்ம தலைவரின் கூலிங் கிளாஸ் மட்டும் முதல் கூல் என்ட்ரி கொடுக்கிறது..மாஸ் பீஜியமுடன் மயிர் கூச்சல் தருணமாக சூப்பர் ஸ்டாரின் என்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது.. ரோலிங் சேரில் செம கெத்தாக டாப் ஏங்கிளில் காட்டப்படுகிறார் ரஜினி..அவரது வழக்கமான மாஸ் ஸ்டைலில் தலைவர் என்ட்ரி வேற லெவல் ஸ்டன்னிங்கை கொடுத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள தலைவர் 169 அறிமுக ப்ரோமோ மாஸ் வைரலாகி வருகிறது.. இந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்..
