rajina and nayanthara issue

தமிழில் "கண்ட நாள் முதல்" படத்தில் சப்போர்டிங் கதாபாத்திரத்தில் அறிமுகமான ரெஜினா... இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினுடன் 'சரவணன் இருக்க பயமேன்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'நெஞ்சம் மறப்பதில்லை' , 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்', 'ராஜதந்திரம் 2 'என அரை டஜன் படங்களை கைகளில் வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த மாநகரம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தன்னை நயன்தாரா போல் நினைத்து கொண்டு பட ப்ரோமோஷன்களுக்கு வர முடியாது என தயாரிப்பாளர்களிடம் கண்டிஷன் போட்டு வருகிறாராம்.

ஆனால் நயன்தாரா கூட இனி தான் நடித்து வெளிவரும் அனைத்து படங்களின் நிகழ்ச்சிகளுக்கும், தயாரிப்பாளருக்கு உறுதுணையாக கலந்து கொள்வேன் என்று கூறி உள்ள நிலையில் ரெஜினா போன்ற நாயகிகள் இப்படி கூறிவருவதை, சீன் போடுகிறார் என பல ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கிண்டல் அடித்து வருகின்றனர்.