ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீசான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடித்திருந்த இப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராமராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்து இருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இப்படம் ரிலீசாகி ஓராண்டை நெருங்க உள்ள நிலையிலும், இதற்கான வரவேற்பு குறைந்தபாடில்லை. சமீபத்தில் ஜப்பானில் ரிலீசாகி அங்கும் வசூல் வேட்டை நடத்தியது.

இதையும் படியுங்கள்... Thunivu Review : துணிவு படம் எப்படி இருக்கு... தூள் கிளப்பினாரா அஜித்....? துணிவு திரை விமர்சனம் இதோ!!

அதுமட்டுமின்றி பல்வேறு சர்வதேச அளவிலான விருது விழாக்களிலும் கலந்துகொண்டு விருதுகளை அள்ளிக்குவித்து வருகிறது இப்படம். அந்த வகையில் தற்போது ஆஸ்கர் விருதுக்கு இணையான விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கிடைத்துள்ளது. அப்படத்தில் இடம்பெறும் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்றுள்ளது.

இந்த விருது விழாவில் கலந்துகொண்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் தங்கள் படத்துக்கு விருது கிடைத்ததும் கத்தி ஆரவாரம் செய்தனர். இசையமைப்பாளர் கீரவாணி இந்த விருதை வாங்கியதும் எமோஷனல் ஆகி கண்கலங்கினார். அதேபோல் சிறந்த படத்துக்கான விருதை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நூலிழையில் தவறவிட்டுள்ளது. அந்த விருது அர்ஜெண்டினா 1985 என்கிற படத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... Varisu Review : பொங்கல் ரேஸில் ஆட்டநாயகன் ஆனாரா விஜய்?... வாரிசு படத்தின் FDFS விமர்சனம் இதோ