rajamouli praises ranbir kapoor : மேடைக்கு செல்லும் போது இயக்குனர் ராஜமவுலியின் கால்களை தொட்டு  வணங்கியுள்ளார் ரன்பீர் கபூர். 

பல தாமதங்களுக்குப் பிறகு “ பிரம்மாஸ்திரா ” , செப்டம்பர் 9, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அமிதாப் பச்சன் , ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் நடித்துள்ள அயன் முகர்ஜியின் பிரம்மாண்டமான படமான “ பிரம்மாஸ்திரா ” வில் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் மௌனி ராய் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய புராணங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாயகன் சிவன் பிரம்மாஸ்திரத்துடன் தனக்கு ஒரு மர்மமான தொடர்பு இருப்பதை உணருவது போன்ற கதையமைப்பு கொண்டது. முன்னதாக இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிடுந்தது. 

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெலுங்கு மொழியில் வெளியாகும் இந்த படதிற்கான ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டுள்ளார் ராஜமவுலி. அவர் மேடைக்கு செல்லும் போது இயக்குனர் ராஜமவுலியின் கால்களை தொட்டு வணங்கியுள்ளார் ரன்பீர் கபூர். இது தொடர்பாக பேசிய ராஜமவுலி, பாலிவுட் பிரபலங்கள் யாரும் இதுவரை இயக்குனரின் காலை தொட்டு வணங்கியதில்லை. இதற்காக ரன்பீர் கபூருக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதார். அதோடு இந்த படம் மற்றுமொரு பாகுபலி போல உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ராஜமௌலி தெரிவித்தார்.

Scroll to load tweet…