சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் ஆல்யா மானசாவின் வளைகாப்பு புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர். 

ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். குளிர் 100 படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தான் ராஜா, ராணி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த சீரியலில் நடிக்கும் போதே இருவருக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக கூறப்பட்டது. அதையடுத்து இருவரும் உருகி, உருகி நடித்து வெளியிட்ட டிக்டாக், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்தது. 

இதையடுத்து இருவருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் பெற்றோர்களை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சின்னத்திரையில் பிரபலமான இந்த காதல் ஜோடிக்கு அடுத்த பரிசு கிடைத்தது. 

அது தான் ஆல்யா மானசா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவின. அதனை சஞ்சீவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் உறுதி செய்தார். இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவிற்கு சிறப்பான முறையில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது. 

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் ஆல்யா மானசாவின் வளைகாப்பு புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.