rai laxmi dream with acting super star
நடிகை ராய் லட்சுமி நடிப்பில், இயக்குனர் தீபக் ஷிவதாசனி இயக்கியுள்ள ஜூலி 2 திரைப்படம் இந்த மாதம் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் மிகவும் கவர்ச்சியாக ராய் லட்சுமி நடித்துள்ளார்.

இந்தப் படம் முழுவதும் ஒரு நடிகை சந்திக்கும் பிரச்னைகள், காதல், கஷ்டங்கள், போன்றவற்றை திரில்லர் கலந்த கலவையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செந்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் நடிகை ராய் லட்சுமி.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இவரிடம் தமிழ் சினிமாவில், நீங்கள் இதுவரை நடிக்காமல் உள்ள விஜய், கமல், ரஜினிகாந்த் இவர்களில் யாருடைய படத்தில் நடிக்க ஆசைப் படுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு நடிகை ராய் லட்சுமி, தனக்கு ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பது தான் மிகவும் ஆசை, காரணம் அவர் மூன்று வருடத்திற்கு ஒரு படத்தில் தான் நடிக்கிறார். ஆனால் இந்த ஆசை நிறைவேறுமா என தெரியாது என்று கூறியுள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது வெளியாக உள்ள ஜூலி 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பாலிவுட் பிரபலங்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
