சந்திரமுகி 2-வுக்காக தடபுடலாக தயாராகும் ராகவா லாரன்ஸ்... கெட்டப் சேஞ்ச் குறித்து அவரே வெளியிட்ட பதிவு
நாயகன் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜிம் வொர்க்கவுட் மூலம் கட்டுக்கோப்பான உடலை உருவாக்கியுள்ளது குறித்து பதிவை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி 700 நாட்களுக்கு மேல் திரையரங்களில் ஓடி சாதனை படைத்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹாரர் புனைக்கதையை கொண்டு உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் பல ஆண்டாக காத்திருப்பில் உள்ளனர்.
இதன் இயக்குனரான பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே இது குறித்தான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். இந்த இரண்டாம் பாகத்திற்கு ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடனான பிரச்சனை காரணமாக படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. பின்னர் சமீபத்தில் படம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாக துவங்கின. அதன்படி நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி பெற்றதாகவும் கூறப்பட்டது. அதோடு ரஜினியுடன் லாரன்ஸ் வாழ்த்து பெற்ற புகைப்படங்களையும் வெளியிட்டார்.
மேலும் செய்திகளுக்கு...தஞ்சை ப்ரோமோஷனுக்கு வருவதை ஆதித்ய கரிகாலன் ஸ்டைலில் சொன்ன சீயான்
சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த படத்திற்காக பாகுபலி பட இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்க உள்ளார். இதில் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் முதல் செட்டியூர் முடிந்து விட்டதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலைகள் இரண்டாம் ஷெட்யூல் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரமுகி 2 படத்தில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை இதனை ரசிகர்கள் விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு...40-லும் குறையாத இளமை..குழந்தையுடன் பிகினி வீடியோக்களை தட்டிவிடும் ஸ்ரேயா
இந்நிலையில் நாயகன் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜிம் வொர்க்கவுட் மூலம் கட்டுக்கோப்பான உடலை உருவாக்கியுள்ளது குறித்து பதிவை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இந்த படத்தில் நாயகன் வேற லெவலில் காட்சி அளிப்பார் என தெரிகிறது. அதோடு அந்த புகைப்படத்தோடு தனது ட்ரஸ்ட் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். தனது சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செலவிடும் லாரன்ஸ், தனது பதிவில் என்னுடைய தொண்டு நிறுவனத்திற்கு நிதி உதவி அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. தேவையானபோது உங்களிடம் நான் உதவி கேட்கிறேன். நான் நல்ல நிலையில் இருக்கேன். பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். மக்களுக்காக சேவையை என்னுடைய பணத்திலேயே செய்ய முடியும் என நினைக்கிறேன். நண்பர்கள் யாரும் என்னுடைய தொண்டு நிறுவனத்திற்கு பணம் அனுப்ப வேண்டாம். உங்களுடைய வாழ்த்துக்களே போதும். இத்தனை ஆண்டுகள் உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விரைவில் சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்கிறேன் என எழுதியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...தான் கர்ப்பமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெண்பா இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்