'சந்திரமுகி 2' துவக்கம்... வைரலாகும் ராகவா லாரன்ஸின் பதிவு!
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு துவக்கத்திற்கு, வாழ்த்து கூறிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் லாரன்ஸ் சமூக வலைத்தளத்தில் ட்வீட் போட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் முதல் பாகம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் துவங்கியது. இதில் நாயகனாக பிரபல நடன இயக்குனரும், இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். லைகா புரோடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. 'சந்திரமுகி 2' படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி.வாசு தான் இயக்குகிறார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாக தனது ஆஸ்தான குரு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட ரசிகர்களும், நெட்டிசன்களும் தொடர்ந்து ராகவா லாரன்சுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
மேலும் செய்திகள்: கடற்கரையில் தாவணியை காற்றில் பறக்கவிட்டு... கவர்ச்சி டீர்ட் வைத்த தர்ஷா குப்தா! ஹாட் போட்டோஸ்...
இப்படத்தில் நடிக்க உள்ள ஹீரோயின் குறித்த அதிகார பூர்வ தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், முதல் பாகத்தில் நடித்த, வடிவேலு இந்த படத்திலும் நடிப்பது பட பூஜையில் கலந்து கொண்டது மூலம் உறுதியாகியுள்ளது. இவரை தொடர்ந்து நடிகை ராதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே போல் இப்படத்திற்கு, பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்க உள்ளார். ஆர்டி ராஜசேகர் ஒலிப்பதிவு செய்ய தோட்டா தரணி கலைப்பணிகளை மேற்கொள்கிறார்.
மேலும் செய்திகள்: சிம்பு நடித்தால் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாது... கண்டீஷன் போட்ட 3 பிரபலங்கள்! விலகிய STR!
இந்நிலையில், 'சந்திரமுகி 2' படத்தின் துவக்கத்திற்கு மனதார பாராட்டிய ரசிகர்கள், நண்பர்கள், மற்றும் அனைவருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக லாரன்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: ரக்சன் - ராஜலட்சுமியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 3 முக்கிய பிரபலங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்..!