தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் லாரன்ஸ், துர்கா, அதிகாரம், சந்திரமுகி 2, ருத்ரன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் திகில் ப்ளஸ் காமெடி சப்ஜெக்டை வைத்து வெற்றிக்கொடி கட்டியவர் ராகவா லாரன்ஸ். அவர் இயக்கி நடித்த, ‘முனி', 'முனி 2: காஞ்சனா', 'காஞ்சனா 2' மற்றும் 'காஞ்சனா 3' ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானவை. இதில் 'முனி 2: காஞ்சனா' திரைப்படம் 'லட்சுமி' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு, அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் மூலம் இந்தியில் இயக்குநராக அறிமுகமானார் லாரன்ஸ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் படம் தயாராகி வருகிறது. 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து, இயக்கும் இப்படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்திற்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதுதவிர துர்கா, அதிகாரம், சந்திரமுகி 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் லாரன்ஸ்.

இதில் துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்குகின்றனர். இப்படம் மூலம் அவர்கள் இருவரும் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கின்றனர். அதேபோல் அதிகாரம் படத்தை எதிர்நீச்சல், காக்கிசட்டை, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார். இதுதவிர பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் லாரன்ஸ்.

இவ்வாறு பிசியான நடிகராக வலம்வரும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக இயக்குனர் கவுதம் மேனனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆக்‌ஷன் கலந்த ரொமாண்டிக் படமாக உருவாக உள்ள இதில் நடிகர் லாரன்ஸ் ஸ்டைலிஷ் லுக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.